இந்திய நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் வாரணாசியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து திருநங்கையொருவர் போட்டியிடுகின்றார்.
உத்தரப்பிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இந்து மதத்தைப் பரப்பி வருகிறார்.
இந்த சூழலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.