கொழும்பில் உள்ள 53,800 குடியிருப்புகள் அடுத்த இரண்டு மாதங்களில் மக்களிடம் கையளிக்கப்படும் என”முன்னாள் நிதி அமைச்சர்
ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 2015ஆம் ஆண்டு கஜிமா வத்தையில் எரிந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்ட போதிலும் அப்போதைய அரச தலைவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஒன்பது வருடங்களின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கஜீமாவத்தை மக்களுக்கு நீதி வழங்கியுள்ளார்.
பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த மக்களுக்கு வீட்டு உரிமை கிடைத்திருக்கின்றது. கொழும்பில் உள்ள 53,800 குடியிருப்புகள் அடுத்த இரண்டு மாதங்களில் மக்களிடம் கையளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார்.
எனவே அதிக வாக்குகளைப் பெற்று அவரை மீண்டும் ஜனாதிபதி கதிரைக்கு கொண்டுவர கொழும்பு மக்கள் பாடுபடுவார்கள் என நான் நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.