போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக தலைவருமான ஹரக் கட்டாவுடன் தொடர்பு வைத்திருந்த புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஒருவர் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹரக் கட்டா துபாயில் இருந்த போது தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதேவேளை பத்தொன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹரக் கட்டாவுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் விசேட விசாரணையை பிரிவை நியமித்தார்.
அங்கு பெயரிடப்பட்டுள்ள அதிகாரிகளில் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரியும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் ஹரக் கட்டாவின் மாதாந்த சம்பளத்தைப் பெற்ற பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பற்றிய தகவல்களும் முன்னர் வெளியாகியிருந்தன. விசாரணைகளின் போது, ஹரக்கட்டாவின் உள்ளக விசாரணைகள் தொடர்பில் ஹரக்கட்டாவுக்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்கிய அதிகாரி ஒருவர் நான்கு கோடி ரூபாவை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.