பப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
இதேவேளை கடந்த மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் வரை உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.