கடலரிப்பு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது சதுக்கம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது ‘மருதூர் சதுக்கம்’ கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல தடைவைகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
அத்துடன் சாய்ந்தமரு பிரதேச செயலாளர் மற்றும்கரையோரம் பேணல் திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கல் அணையிடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை சாய்ந்தமருது பகுதியிர் கடலரிப்பு அதிகரித்துள்ளமையினால் மருதூர் சதுக்கம் எனப்படும் கடற்கரை திடல்பகுதி பாதிப்படைந்துள்ளது.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்ட போது கல் அணைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த பிரதேசத்தை அண்மித்ததாக கடலரிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையினால் மருதூர் சதுக்கம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக பிரதேச அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களில் கல் அணை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது