புத்தாண்டு தினமான நேற்று யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மது அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.