பண்டிகைகாலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம் இன்று மக்களை பாரிய பொருளாதார சுமைக்குள் தள்ளியுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாடு வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீண்டெழுந்துள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவிக்கின்றனர். அவ்வாறாயின் பொருட்களின் விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும். எரிபொருளின் விலையும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை. கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டை ஆட்சி செய்த போது காணப்பட்ட நிலையே தற்போது தொடர்கின்றது. ஆனால், நாட்டு மக்களை இனியும் அரசாங்கத்தினால் ஏமாற்ற முடியாது. இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே.
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சிறந்த பொருளாதார திட்டம் அவரிடம் மட்டும்தான் காணப்படுகின்றது. நாட்டு மக்களின் நலன் தொடர்பாக அவருக்கு கரிசனை உள்ளது. எனவே சஜித் பிரேமமதாச தவிர்ந்த வேறு ஒருவரினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது” இவ்வாறு விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.