நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் இன்று (17) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி, நடிகை தமிதா அபயரத்ன மற்றும் அவரது கணவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி முப்பது இலட்சம் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.