அண்மைக்கால மரணங்களுக்கு மாரடைப்பே பிரதான காரணமாக அமைவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் இயக்குநரகத்தின் விசேட நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2010 முதல் 2020 வரை அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பு காரணமாக இருப்பதாகவும், இந்த நிலை இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்
சுகாதாரமற்ற உணவு, உடல் உழைப்பு இல்லாமை, புகையிலை, மதுப் பழக்கம், மன உளைச்சல் போன்றவை மாரடைப்புக்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்தார்
மேலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணனிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியிருப்பதாகவும், முடிந்தவரை நடக்கப் பழக வேண்டும் என்றும்,குறிப்பிட்டுள்ளார்.