முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித மாற்றமும் இன்றி தொடர்வதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகம தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நெடுஞ்சாலைகளின் வருமானம் மற்றும் கடனை செலுத்துவதற்கான கால அவகாசம் குறித்து அமைச்சர் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர், சீனா, இந்தியா போன்ற நாடுகளின் நீண்ட கலந்துரையாடலின் விளைவாக கடன் மறுசீரமைப்பு இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திட வாய்ப்பு உள்ளதுடன் ஜப்பான் மற்றும் பாரிஸ் ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.