உக்ரைனுக்கு மேலதிக இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிப் பொதி ஒன்று உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பு வாகனங்கள், இராணுவ பீரங்கிகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட பல ஆயுதங்களும் உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ளன.
உக்ரைனுக்கு 60.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொதியொன்றை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் பிரதிநிதிகள் சபையில் உள்ள குடியரசு கட்சியினர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.