உக்ரேன் ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை நாடாளுமன்றில் அறி;க்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் ஊடாக இவ்வாறான மோசடி இடம்பெற்றுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி ஒரு சில தரப்பினர் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான காரணிகளை ஆராய்ந்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பான முழுமையான அறிக்கை பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை கையளிக்கப்படும்” என நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.