படகு போக்குவரத்தை அடிப்படையாக கொண்டும் இயற்கை அழகுகளை அடிப்படையாக கொண்டும் இத்தாலியின் வெனிஸ் நகரம் சுற்றுலா நகரமாக விளங்குகிறது.
வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நகர நிர்வாகம் கட்டண நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.
வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க ஒருநாள் கட்டணமாக 1,592 ரூபாய்(5 யூரோ) வசூலிக்கப்பட உள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பருவ நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.