சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகிச்செல்வதற்கான பொதுமன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு ஒன்றிணைந்த இராணுவப் படை கோரிக்கை விடுத்துள்ளது
சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 20 ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியை பயன்படுத்தி உரிய முறையில் இராணுவத்திலிருந்து விலகுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொதுமன்னிப்பு காலப்பகுதியில் உரிய முறையில் சேவையை மீண்டும் தொடர்தல் அல்லது சட்டரீதியாக சேவையிலிருந்து விலகுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இந்த நிலையில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொது மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தில் வெளியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் வசிக்கும் 13 இராணுவ வீரர்களும் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையில் இருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.