காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை 2024 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்களுக்கு இந்த நிதியத்திற்குப் பங்களிப்புகளை அளிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஏப்ரல் 30ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் நாடளாவிய ரீதியில் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின்படி, 2024 மே 31 வரை காலத்தை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டது.
காசா சிறுவர் நிதியத்திற்கு” பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாடளாவிய ரீதியில் உள்ள பொது மக்கள் இன, மத பேதமின்றி அதனுடன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.