ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் பொரளை கெம்பல் பார்க்கில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மே தினக் கூட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டு மக்கள் சிறந்த புத்தசாலிகள். எனவே ஜனாதிபதியின் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்கள் நன்கு அறிவார்கள். மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுக்கவில்லை.
நீண்டகால அபிவிருத்தி இலக்கினை முன்னிறுத்தியே ஜனாதிபதி பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.
கடன் மறுசீரமைப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேலும் துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பார்த்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் பொரளை கெம்பல் பார்க்கில் இடம்பெறவுள்ளது. மே தினத்தின் பின்னர் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்” என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.