மே தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் 10,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களை பேரணிகளுக்காக அழைத்து வரும் பஸ் சாரதிகள் ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நிஹால் தல்துவ தெரிவித்தார்.