சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை சிறிசேன மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கோட்டை – சத்தம் வீதியில் நடைபெறவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு மே தினக் கூட்டம் தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் பொரளை கெம்பல் மைதானத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கம்பஹா நகரசபை மைதானத்திலும் நடைபெறவுள்ளது. அதேநேரம், தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நுவரெலியா – கொட்டகலை பொது மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.