மே தினத்தை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு நகரில் மாத்திரம் 14 மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் நாடளாவிய ரீதியில் 40 மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், மே தினக் கொண்டாட்டங்களை காணொளியாகப் பதிவு செய்ய அனுமதியின்றி ட்ரோன் கெமராக்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.