மன்னார். கட்டுக்கரைக் குளப் பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டுக்கரை குள திட்டமிடல் முகாமைத்துவ குழுவின் தலைவர் எம்.சந்தாம்பிள்ளை சில்வா தெரிவித்துள்ளார்.
குளத்தினது படுக்கையில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதனால் மாவட்டத்தின் சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு,மழைவீழ்ச்சியும் குறைவடைகின்றது. எனவே இக் காணிகளை மீட்டுக் கொள்ள அனைத்து திணைக்களங்களும், மாவட்டத்தில் உள்ள பொது நிறுவனங்களும் இணைந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.