முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 31 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு மிகிந்து மாவத்தையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச” ரணசிங்க பிரேமதாச இந்த நாட்டின் 220 லட்சம் மக்களின் துயரங்களை போக்கி அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியவர்.நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கொள்கை திட்டங்களுடன் நாட்டை வழிநடத்தியவர். அவரின் வழிகாட்டலில் இந்த நாட்டை முன்னேற்றிச் செல்வதே சிறந்ததாகும்” எனத் தெரிவித்திருந்தார்.