நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்ப 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து நிகர அடிப்படையில் மத்திய வங்கி அந்நிய செலாவணியை கணிசமான அளவில் கொள்முதல் செய்தமையே கையிருப்பு அதிகரித்தமைக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மத்திய வங்கியின் அந்நிய செலாவணி வசதியும் அடங்கும். இதேவேளை, மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1,139 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 9.8 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை பொருட்களின் ஏற்றுமதியின் அதிகரிப்பு முக்கியமாக ஏற்றுமதி வருவாய் அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.