இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்களால் கூறுகின்றனர்.
குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகியுள்ளது.
இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.