நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” என அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி. கோழைகளை எனக்கு பிடிக்காது. தைரியசாலியை தான் பிடிக்கும். விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
அத்துடன் ‛‛நல்லது செய்வதற்கான பரந்த களம் என்பது அரசியல்தான். அப்படிப்பட்ட களத்திற்கு அஜித்குமார் வந்தால் கண்டிப்பாக நாங்கள் வரவேற்போம்” இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.