பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரான ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கவே விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுதரி ஃபவத் ஹூசைன், ராகுல் காந்தியை பாராட்டிக் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்தியப் பிரதமர் இவ்வாறு தனது விமர்சனத்தினை முன்வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக குஜராத் மாநிலம் ஆனந்த் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கினை இழந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. பாகிஸ்தானியர்கள் அங்கே அழுகிறார்கள். காங்கிரஸின் இளவரசரை (ராகுல் காந்தி) இந்தியாவின் பிரதமராக்க பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புகிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானைப் பின்பற்றுவதான தோற்றப்பாடு இருக்கின்றது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.