அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.
இன்றுடன் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளதோடு, முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 4 இலட்சத்து 59 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3,527 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சையை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.