இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
சந்திப்பின் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான ஜோன் பிஜேர்கெம், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
நோர்வே அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.