புகையிரதப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் புகையிரதங்களின் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பதால் பல விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்குத் பிரச்சினைக்கு தீர்வு காண, பயணிகள் புகையிரதங்களின் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகையிரதங்களின் படிக்கட்டுகளில் நின்றபடி படி பயணிக்க வேண்டாம் என புகையிரத திணைக்கள அதிகாரிகள் அறிவித்தாலும், சுற்றுலாப் பயணிகள் அவ்வாறு தொடர்ந்து செய்வதால் அவற்றை தடுக்க கடினமாக உள்ளதாக புகையிரத திணைக்கள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பெரும்பாலானவர்கள் அதிகாரிகளால் தாங்கள் துன்புறுத்தப்பட்டுவதாக புகையிரத திணைக்களத்திடம் பயணிகள் முறைப்பாடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, விபத்துக்கள் ஏற்பட்டால் திணைக்களம் பொறுப்பேற்காது என புகையிரதத் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.