சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவுத் திணைக்களம் தொடர்பில் நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை காலை பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ளது.
இதேவேளை வெளிநாட்டில் இருக்கும் குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் திரன் அலஸ் நாடு திரும்பியதுடன் பின்னர் அரச அதிகாரிகளுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அங்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஸா வழங்கும் நடைமுறை இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் குரல் எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையிலேயே இன்று இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.