மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது தொடர்பான துறைசார் மேற்பார்வைக்கு குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் மின்சார சபை 8,200 கோடி ரூபா இலாபமீட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேலும் 20 வீதத்தினால் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது தொடர்பான துறைசார் மேற்பார்வைக்கு குழு பரிந்துரைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும், வரத்தகர்களுக்கும் தாமதமின்றி நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் மேற்பார்வைக்கு குழு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவும் மின்சார சபையும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கௌ;ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சாரசபை தயாரித்து வருவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இறுதி யோசனை இந்த வாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும், அதன் பின்னர், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தில் திருத்த செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.