அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய “சேமிப்புத் தொகையை” அவுஸ்திரேலியா அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.
மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய நாட்டிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, வெள்ளிக்கிழமை முதல், சர்வதேச மாணவர் ஒருவர், அவுஸ்திரேலியா விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் 29,710 அவுஸ்திரேலியா டொலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் கடந்த ஒக்டோபரில், இந்தத் தொகை 21,041 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.