இலங்கை அரசியலமைப்பினை மீறி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்திருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் குறிப்பிட்டார்.
இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து
வெற்றிடமாகியுள்ள உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயரினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இரட்டை குடியுரிமை பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர். பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.