தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் செயல்படும் எரிமலை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த எரிமலை தற்போது எரிமலைக்குழம்புகளை கக்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ளூ லகூன் அபாயகரமான பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எரிமலையைச் சுற்றி விமானங்கள் செல்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

















