ஊழலை எதிர்த்து வந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலின் முகமாக மாறியிருப்பதாக தமிழகத்தின் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பா.ஜ.க. தென்னிந்திய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது ”ஆம் ஆத்மி என்பதே காங்கிரஸ் கட்சியின் ஊழலை எதிர்த்து உருவான கட்சி எனவும், ஆனால் இன்று இருகட்சிகளுமே ஊழலில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது” எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இருகட்சிகளும் ஒன்றாக இணைந்திருப்பதை டெல்லி மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் எனவும், 2019-ம் ஆண்டை விட டெல்லியில் இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.