”இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக” ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா (Maria Zakharova) ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைப்பதற்காகவே இந்தியாவின் தேர்தல் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.