வெப்பநிலை அதிகரிப்பால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் உணவகங்கள், புடவைக்கடைகள், வர்த்தக நிலையங்கள் போன்றவை வழமை போன்று இயங்கிய போதிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் மக்களது நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















