டயானா கமகே விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பினையே வழங்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”முன்னதாக கீதா குமாரசிங்கவின் விவகாரத்திலும் இவ்வாறான நிலையே ஏற்பட்டது.
கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை பெற்றிருந்த நிலையில் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையும் ரத்து செய்யப்பட்டது.
இரட்டை குடியுரிமை உள்ள ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இரட்டை குடியுரிமை பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என நேற்றைய தினம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.