நாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விற்பனை செய்யப்படும் 11 வகையான அத்தியாவசிய பொருட்களின் வரையறுக்கப்பட்ட சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கோதுமை மா 179 முதல் 189 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ வெள்ளை சீனி 258 முதல் 175 ரூபாய் வரையிலும், விற்பனை செய்யப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு கிலோக பருப்பு 288 முதல் 302 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, வெள்ளை முட்டை ஒன்று 41 ரூபாய் முதல் 43 ரூபாய் வரையிலும், சிவப்பு நிற முட்டை ஒன்று 45 ரூபாய் முதல் 47 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.