ஜக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க கட்சியின் நுவரெலியா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மயந்த திஸாநாயக்க இதனை தெரிவித்திருந்தார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தல் பிரசாங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.