பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலான ஆட்சேபனைகளை ஆராய்ந்து வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் நேற்று தங்களுடைய ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருந்தது.
இதனையடுத்து குறித்த ஆட்சேபனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதன் பின்னர் அது தொடர்பில் தொழில் அமைச்சருக்கு அறிக்கை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இறுதி தீர்மானத்தை எடுப்பார் எனவும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.