பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சட்டவிரோத குடிப்பெயர்வோரை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தததில் கையெழுத்திட்டுள்ளன.
லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு விவகாரங்களுக்கான முதல் கூட்டுப் பணிக்குழுவிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளும் தங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் உறுதியளித்தன.
குறித்த ஒப்பந்தத்திற்கமைய, சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள், வெளிநாட்டு தேசிய குற்றவாளிகள் மற்றும் காலாவதியான விசாவை பயன்படுத்தி தங்கியிருக்கும் தனிநபர்கள் போன்றோர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவில் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதைப்போன்று, பங்களாதேஷிலும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரித்தானியாவின் சட்டவிரோத இடம்பெயர்வை எதிர்ப்பதற்கான அமைச்சர் மைக்கேல் டொம்லின்சன் (Michael Tomlinson), குடிவரவு அமலாக்க இயக்குனர் பாஸ் ஜாவி (Bas Javid), மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.