மின்சார கட்டணத்தை குறைக்கும் விகிதத்தை எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து, மின்சார கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மின்சார கட்டண குறைப்பு தொடர்பான யோசனையை சமர்ப்பிப்பதற்கு, இலங்கை மின்சார சபை இன்று வரை காலவகாசம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















