”முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது” என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நாட்டைப் பாதுகாக்க மீண்டும் முன்வர வேண்டிய பொறுப்புள்ளது. நாடு பாதாளத்தை நோக்கி செல்லுமாக இருந்தால், முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது.
இன்று நாட்டின் பாதுகாப்பை விட பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தியே பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மிகவும் பொருத்தமான கட்சியாகும் நாட்டை மீண்டுமொரு பயங்கரவாதம், புரட்சிகள் மற்றும் கலவரங்களுக்கு தள்ளலாம்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குழுக்கள் நாட்டில் அரசியலில் ஈடுபடுகின்றன. எனவே இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டுக்கு வேலைசெய்து காட்டிய ஒருவர். இந்த பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எமது முழுப் பலத்தையும் வழங்குவோம்” இவ்வாறு ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.