சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுதக் கப்பல், ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கை சேர்ந்த மரியான் டேனிகா என்ற குறித்த சரக்குக் கப்பலில், 27 டொன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவதனால், இந்த கப்பல் ஆப்பிரிக்க நாடுகளை சுற்றிக் கொண்டே ஸ்பெயின் வழியாக இஸ்ரேல் பயணிக்கின்றது.
இந்நிலையில், குறித்த கப்பல் எதிர்வரும் 21ஆம் திகதி, ஸ்பெயின் நாட்டின் கர்டஜெனா துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி கோரியது.
எனினும், ஆன்டிகா மற்றும் பர்புடா நாட்டைச் சேர்ந்த ‘போர்கம்’ என்ற சரக்கு கப்பல் ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல ஏற்கெனவே அனுமதி கோரியுள்ளமையினால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மரியான் டேனிகா கப்பலில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதால், அந்தக் கப்பலை ஸ்பெயின் துறைமுகத்தில் நுழைய அனுமதிக்க கூடாது என, ஸ்பெயின் பிரதமரிடம் கூட்டணி கட்சியான சுமர் என்ற இடதுசாரிக் கட்சியும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.