வுனியாவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக சர்வ மத தலைவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, யுத்ததில் வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவித்திருந்த நிலையிலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டபாளர்கள் இது போரில் இறந்தவர்களை அனுஸ்டிக்கும் நிகழ்வு என அறிவிக்கும்படி தெரிவித்திருந்தனர்.
இதனால் குறித்த நிகழ்வு எதற்காக என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்ததுடன், ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைக்கு அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரும் விசனம் வெளியிட்டதுடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகை தந்திருந்த தமிழ் மக்கள் தீபம் ஏற்றிவிட்டு வெளியேறிச சென்றிருந்தனர்.
இதனையடுத்து அதிதிகளாக வருகை தந்திருந்த மதத்தலைவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.