கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதன்படி குறித்த அறிவிப்பு மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது
நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த அறிவித்தல் விடுத்துள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.