இந்தோனேசியாவின் மிகப்பெரிய தீவான பாலியில் வசித்து வரும் மக்கள் பயனடையும் வகையில் தனது ஸ்டார்லிங்க் (Starlink) சட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், நேற்று அங்கு ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் மூலம் சுமார் பல ஆயிரம் தீவு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து எலோன் மஸ்க் கருத்துத் தெரிவிக்கையில் ” தொலைதூர மருத்துவ உதவிகளுக்கு இது மிகவும் உதவும். இணையவழி கல்வி பெறவும் நல்வாய்ப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இணைய சேவைக்கான பயன்பாடு கிடைத்தால் யார் வேண்டுமானாலும் தங்களது தயாரிப்புகளை உலகில் விற்பனை செய்ய முடியும். இது மக்களுக்கு சிறந்த வகையில் பயன் தரும் என நான் நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்டார்லிங்க் நிறுவனமானது சுமார் 70 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.