இளைஞர் ஒருவர் 8 தடவைகள் பா.ஜ.கவுக்கு வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற 4 ஆம் கட்டத் தேர்தலின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த இளைஞர் பா.ஜ.க வுக்கு 8 முறைகள் வாக்களித்து அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். வாக்குச்சாவடிக்குள் தொலைபேசி கொண்டு செல்லவும், வாக்காளர் வாக்களிப்பதை படம் பிடிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
எனினும் குறித்த இளைஞர் சர்வசாதாரணமாக குறித் வீடியோவினைப் பதிவு செய்துள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.