பாகிஸ்தானில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என பாக்கிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய மூத்த அதிகாரி ஜாஹீர் அகமது பாபர் கருத்துத் தெரிவிக்கையில்” பாகிஸ்தானில் இம்மாதம் முழுவதும் கடுமையான வெப்ப அலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக் கூடும் இந்த வாரத்தில் பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.
கடந்த ஆண்டுகளில், பாகிஸ்தான் நாட்டைத் தாக்கிய இயற்கைப் பேரழிவுகளில் இது அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தலாம் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாகிஸ்தானில் மக்கள் தொகை அதிகம் நிறைந்த பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஒரு வாரத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.