“நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் காற்று மற்றும் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்களால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கைக்கு அமைய மேல் மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதன்படி மேல் மாகாணத்தில் 4,814 குடும்பங்களைச் சேர்ந்த 19,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.